இந்தியாவிற்கு உதவும் பிரான்ஸ்

மருத்துவ உபகரணங்களை வழங்கி இந்தியாவிற்கு உதவும் பிரான்ஸ்

by Staff Writer 27-04-2021 | 5:55 PM
Colombo (News 1st) மருத்துவ உபகரணங்கள், மூச்சியக்கிகள் (ventilators), திரவ ஒக்சிஜன் தாங்கிகள் மற்றும் ஒக்சிஜன் மின் ஆக்கிகளை (oxygen generators) இந்தியாவிற்கு அனுப்பவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து வெற்றி பெறும் என தெரிவித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்படாதோர் இல்லை எனவும் தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் இந்தியாவிற்கு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, இந்தியாவின் தற்போதைய நிலை உள்ளத்தை உருக்கும் நிகழ்வைக் காட்டிலும் மோசமானதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட தம்மாலான அனைத்து உதவிகளையும் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பெல்ஜியம் தடை விதித்துள்ளது.