ஹரின் பெர்னாண்டோ அடிப்படை உரிமை மனு தாக்கல் 

ஹரின் பெர்னாண்டோ அடிப்படை உரிமை மனு தாக்கல் 

ஹரின் பெர்னாண்டோ அடிப்படை உரிமை மனு தாக்கல் 

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 2:16 pm

Colombo (News 1st) தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜயவர்தனவினூடாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்