ரிஷாட் பதியுதீனின் கைதிற்கு மனோ கணேசன் கண்டனம்

ரிஷாட் பதியுதீனின் கைதிற்கு மனோ கணேசன் கண்டனம்

ரிஷாட் பதியுதீனின் கைதிற்கு மனோ கணேசன் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 8:13 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனூஷ நானாயக்கார மீதான அச்சுறுத்தலை நிபந்தனையின்றி கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்கமாக கொழும்பில் குடும்பத்துடன் வாழும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை அதிகாலை அமைதியை ஊடறுத்து, அவரது வீட்டை சுற்றிவளைத்து, ஒரு பாதாள உலக தலைவரை இழுத்துச் செல்வதைப் போல் கொண்டு சென்றதன் மூலம் அரசு எதிர்க்கட்சிக்கு கூறும் செய்தி என்னவெனவும் அவர் வினவியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பில் உண்மைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனூஷ நாணயக்கார மீதும் கைது முயற்சிகள் உள்ளதாக மனோ கணேசனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை பலரையும் அவ்வாறு சுற்றிவளைப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மனோ கணேசன், ஜனநாயக ரீதியாக இந்த செயற்பாட்டை அனைவரும் எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்