மருத்துவ ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை: சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு 

மருத்துவ ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை: சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு 

மருத்துவ ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை: சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 4:59 pm

Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்சிஜன் போதியளவு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

களுபோவில போதனா வைத்தியசாலையிலும் ஒக்சிஜனுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என அவர் கூறினார்.

நாட்டிற்கு மருத்துவ ஒக்சிஜனை விநியோகிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோக சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஒக்சிஜன் தொழிற்சாலை நிர்வாகத்துடன் நாளையும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கும் போதனா வைத்தியசாலைகளுக்கும் மேலதிகமான ஜம்போ சிலிண்டர்களை அடுத்த வாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்