ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 6:06 pm

Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுதேவ ஹெட்டியாராச்சி அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டியாராச்சி, சிறந்த அனுபவமிக்க சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.

25 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர், முன்னணி ஊடக நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்