கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Apr, 2021 | 9:33 am

Colombo (News 1st) இன்று (27) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 997 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

குறித்த தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 173 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 170 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும் பதுளை மாவட்டத்தில் 25 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 59 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 11 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 07 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 22 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 22 பேருக்கும் யாழ். மாவட்டத்தில் 17 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் மூவர், நாரஹேன்பிட்ட பகுதியில் ஒருவர், வெள்ளவத்தை பகுதியில் 10 பேர் மற்றும் கோட்டை பிரதேசத்தில் ஐவர் உள்ளடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 173 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டி பகுதியில் 16 பேர், வத்தளை பகுதியில் இருவர் அடங்கலாக கம்பஹா மாவட்டத்தில் புதிதாக 170 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

திருகோணமலை பிரதேசத்தில் 09 பேரும் அன்புவெளிபுரம் பகுதியில் ஒருவரும் கந்தளாய் பிரதேசத்தில் இருவரும் கோமறன்கடவல பகுதியில் நால்வரும் கிண்ணியா பிரதேசத்தில் ஒருவரும் உப்புவௌி பகுதியில் 42 பேரும் கடந்த 24 மணி ​நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பகுதியில் ஒருவருக்கும் டிக்கோயா பகுதியில் ஒருவருக்கும் கொட்டகலை பகுதியில் 14 பேருக்கும் ராகலை பகுதியில் ஐவருக்கும் உடபுஸ்ஸல்லாவை பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரையில் 102,376 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 94,577 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (26) மேலும் 3 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்