இந்தியாவிற்கான விமான சேவையை இரத்து செய்தது அவுஸ்திரேலியா

இந்தியாவிற்கான விமான சேவையை இரத்து செய்தது அவுஸ்திரேலியா

இந்தியாவிற்கான விமான சேவையை இரத்து செய்தது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2021 | 3:11 pm

Colombo (News 1st) இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15 ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிஸன் தடை விதித்துள்ளார்.

இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபாய், பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் மருத்துவ ஒக்சிஜனுக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தைத் துண்டித்து வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்