by Chandrasekaram Chandravadani 27-04-2021 | 11:06 AM
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இயக்குநர் தாமிரா உயிரிழந்துள்ளார்.
52 வயதான இவர், இரட்டைச்சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதன் பின்னர், அண்மையில் சமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் வௌியாகிய ஆண் தேவதை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
இயக்குநர் தாமிராவின் மறைவிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.