அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த தீர்மானம்

அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த தீர்மானம்

அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 8:07 am

Colombo (News 1st) அரச ஊழியர்களை இன்று (27) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட சுற்றுநிரூபம் வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

நிறுவன பிரதானிகளினால் குறிப்பிடத்தக்களவு ஊழியர்களை அழைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் சுற்றுநிரூபம் வௌியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணம் தொடர்பில் சுற்றுநிரூபத்தில் விசேட கவனம் செலுத்தப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்