யாழ். உரும்பிராய் வாகன விபத்தில் 16 பேர் காயம்

by Staff Writer 26-04-2021 | 2:28 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோப்பாய், உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். மணல் ஏற்றிச்சென்ற டிப்பர், இராணுவ வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது இராணுவ வாகனத்தில் பயணித்த 15 பேரும் டிப்பரின் சாரதியும் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பிலான ​மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.