ஆஸ்கார் விருது 2021; வெற்றியாளர்கள் விபரம்

ஆஸ்கார் விருது 2021; வெற்றியாளர்கள் விபரம்

by Staff Writer 26-04-2021 | 7:20 PM
Colombo (News 1st) 93 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமேட்லேண்ட் (Nomadland) திரைப்படம் சுவீகரித்தது. 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சலிஸில் இன்று (26) நடைபெற்றது. சிறந்த திரைப்படத்திற்காக விருதை நோமேட்லேண்ட் திரைப்படம் சுவீகரித்தது. ஆஸ்கரின் 93 வருட வரலாற்றில் பெண் இயக்குநருக்கு இரண்டாவது தடவையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிக்கைக்கான விருது ஃபிரான்ட்சிஸ் மெக்டோராமெண்டுக்கு (Frances McDormand) நோமேட்லேண்ட் திரைப்படத்தின் கதாநாயகிக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகர் விருது 83 வயதாகும் பழம்பெரும் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸுக்கு (Anthony Hopkins), 'The Father' திரைப்படத்துக்காக கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் Judas and the Black Messiah படத்துக்காக Daniel Kaluuya பெற்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது The Father திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த சர்வதேச முழுநீளப் படத்துக்கான ஒஸ்கர் விருதினை Another Round திரைப்படமும் சிறந்த முழுநீள அனிமேஷன் படத்துக்கான விருதினை Soul திரைப்படமும் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதினை If Anything Happens, I Love You படமும் வென்றுள்ளது. * சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர் (My Octopus Teacher) * சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது - டென்மார்க்கின் Another Round * சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Soul * சிறந்த அனிமேஷன் குறும்படம் - If Anything Happens I Love You * சிறந்த ஆவண குறும்படம் - Colette * சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - Two Distant Strangers * சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - Andrew Jackson, David Lee, Andrew Lockley and Scott Fisher * சிறந்த ஒளிப்பதிவாளர் - Erik Messerschmidt (Mank) * சிறந்த படத் தொகுப்பாளர் - Mikkel EG Nielsen (Sound of Metal) * சிறந்த திரைக்கதை - Emerald Fennell (Promising Young Woman) * சிறந்த பின்னணி இசை - Trent Reznor, Atticus Ross and Jon Batiste (Soul) * சிறந்த பாடல் - Fight For You - Judas and the Black Messiah * சிறந்த துணை நடிகை - Yuh Jung Youn (Minari) * சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - Sergio Lopez-Rivera, Mia Neal and Jamika Wilson (Black Bottom) * ஆடை வடிவமைப்பு - Ma Rainey's Black Bottom * சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - Donald Graham Burt and Jan Pascale (Mank) * சிறந்த ஒலி அமைப்பு - Nicolas Becker, Jaime Baksht, Michelle Couttolenc, Carlos Cortés and Phillip Bladh (Sound of Metal)