யாழ். கோப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ். கோப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ். கோப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2021 | 5:39 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் 07 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் மார்க்கமாக இந்த ஐஸ் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏற்கனவே கேரள கஞ்சா விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்