தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 19 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 19 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 19 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2021 | 3:03 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதை முன்னிட்டு, தனிமைப்படுத்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையான காலப்பபகுதி வரை 3,470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில், தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்