காணாமற்போன நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் மீட்பு

காணாமற்போன KRI Nanggala 402 நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு

by Bella Dalima 24-04-2021 | 4:30 PM
 Colombo (News 1st) காணாமற்போயிருந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கிவிட்டதாகவும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரையும் மீட்பதற்கான நம்பிக்கையும் தற்போது அற்றுப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலிலிருந்த ஒக்ஸிஜன் சேமிப்பு தீர்ந்துபோயுள்ள நிலையில், இந்தக் கருத்து வௌியாகியுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களில் இயந்திர உராய்வு நீக்கி அடங்கிய போத்தலொன்றும் பாதுகாப்புக் கருவியொன்றும் உள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தின் எயார் மார்ஷல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசிய கடற்படையை சேர்ந்த KRI Nanggala 402 எனும் நீர்மூழ்கிக் கப்பல் 53 வீரர்களுடன் காணாமற்போயுள்ளதாக கடந்த 22 ஆம் திகதி அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். 21 ஆம் திகதி பாலி தீவிற்கு வடக்கே குறித்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.