கலால் வரி சட்டத்தில் திருத்தங்கள்

கலால் வரி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன

by Staff Writer 24-04-2021 | 3:05 PM
Colombo (News 1st) கலால் வரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 சட்டத்தரணிகள் உள்ளடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கலால் வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் இந்த உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார். குழுவில் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் அடங்குகின்றனர். குழுவினரின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், அதன் அறிக்கையை வருடத்தின் முதல் 6 மாதங்களுக்குள் எதிர்பார்ப்பதாக கலால் வரி திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய வர்த்தக நிலை, உலக பொருளாதாரம், சமூகத்தினரின் நிலைபாடு மற்றும் பல்வேறு தரப்பினரின் தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கலால் வரி திணைக்களத்தின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.