புதிதாக 1000 தேசிய பாடசாலைகள் நிறுவப்படவுள்ளன

புதிதாக 1000 தேசிய பாடசாலைகள் நிறுவப்படவுள்ளன

by Bella Dalima 23-04-2021 | 4:07 PM
Colombo (News 1st) புதிதாக 1000 தேசிய பாடசாலைகளை நிறுவும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாகாணங்களிலும் புதிய தேசிய பாடசாலை உருவாக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் சியாம்பலாண்டுவ மகா வித்யாலயாவில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதன் முதற்கட்டத்தில் தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலக பிரிவுகளில் புதிதாக தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அனைத்து பிரதேச செயலகத்திலும் தலா 2 தேசிய பாடசாலைகள் நிறுவப்படவுள்ளன.