by Staff Writer 23-04-2021 | 4:52 PM
Colombo (News 1st) குருநாகல் - கனேவத்த ரயில் நிலையத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ரயில்களை நிறுத்தாது பயணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கனேவத்த ரயில் நிலையத்தை அண்மித்துள்ள 05 கிராமங்கள் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.
அதற்கமைய, மறு அறிவித்தல் வரை கனேவத்த ரயில் நிலையம் மூடப்படும் என அவர் கூறினார்.
எனினும், தூர பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் கனேவத்த ரயில் நிலையத்தில் நிறுத்தாது தொடர்ந்து பயணிக்கும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.