பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய குழு நியமனம்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய குழு நியமனம்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2021 | 3:28 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் தலைமையில் 8 பேரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்ஸ, கெஹலிய ரம்புக்வெல்ல, சுசில் பிரேமஜயந்த, அநுர யாப்பா, இம்தியாஸ் பாகிர் மாகர், ஆர்.எம். ரஞ்ஜித் பண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாவர்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற அமைதியின்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்