க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வௌியீடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வௌியீடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2021 | 4:00 pm

Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித்த தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை 23 நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைள் இடம்பெறவுள்ளன.

4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்