குருநாகல் மாவட்டத்தின் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

குருநாகல் மாவட்டத்தின் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

குருநாகல் மாவட்டத்தின் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2021 | 3:12 pm

Colombo (News 1st) குருநாகல் மாவட்டத்தின் வாரியபொல, கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் நிராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் வெல்லவ பொலிஸ் பிரிவின் நிக்கதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வௌியேறவோ அல்லது அப்பகுதிகளுக்குள் பிரவேசிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவுவதாலேயே குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மூன்று வாரங்கள் எச்சரிக்கை மிக்க நாட்கள் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

புது வருடத்திற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களை விட தற்போது அதிகளவானோர் தொற்றுக்குள்ளாவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்