இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலைக் காணவில்லை

53 பேருடன் பயணித்த இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலைக் காணவில்லை

by Bella Dalima 22-04-2021 | 4:46 PM
Colombo (News 1st) இந்தோனேசிய கடற்படையை சேர்ந்த KRI Nanggala 402 எனும் நீர்மூழ்கிக் கப்பல் 53 வீரர்களுடன் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர். நேற்று (21) பாலி தீவிற்கு வடக்கே குறித்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பலைக் கண்டுபிடிக்க போர் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனேசிய இராணுவத் தளபதி கூறியுள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமும் KRI Nanggala 402 கப்பலின் தேடுதல் பணிக்கு உதவி கேட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போயுள்ளது. ஆழமான பகுதியில் மூழ்கிச் செல்ல, அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட பிறகு தான், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.