யுரேனியத்துடன் பயணித்த சீன கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேறியது

by Bella Dalima 22-04-2021 | 3:43 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கதிரியக்க யுரேனியத்துடன் பயணித்த சீன கப்பல் இன்று பிற்பகல் 1.30 அளவில் நாட்டின் கடல் எல்லையில் இருந்து வௌியேறியது. குறித்த கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு நிவர்த்திக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் நாட்டின் கடல் எல்லையில் இருந்து வௌியேறியதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் H.L. அனில் ரஞ்சித் தெரிவித்தார். நெதர்லாந்தின் ரொட்டர்டேமில் இருந்து சீனாவின் ஷங்காய் துறைமுகம் நோக்கிச் சென்ற MV BBC NAPLES என்ற கப்பல் கடந்த 20 ஆம் திகதி இரவு 09 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த சரக்கு கப்பலில் Uranium Hexafluoride இருந்ததாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் நேற்று அறிக்கை வௌியிட்டிருந்தது.