by Bella Dalima 22-04-2021 | 4:56 PM
சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வௌிவந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகளும் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதற்பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.