முகக்கவசம் அணியாமை தொடர்பில் விசாரிக்கச் சென்ற நகர சபை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முகக்கவசம் அணியாமை தொடர்பில் விசாரிக்கச் சென்ற நகர சபை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முகக்கவசம் அணியாமை தொடர்பில் விசாரிக்கச் சென்ற நகர சபை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2021 | 3:08 pm

Colombo (News 1st) நுவரெலியா நகர சபை உத்தியோகத்தர் ஒருவர் மீது சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் உணவு பரிமாறப்பட்டதாகக் கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகளை மேற்கொள்ளச் சென்ற உத்தியோகத்தர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டிகைக்கால நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அநேகமானோர் நுவரெலியாவிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

வசந்த காலத்திற்கு இணையாக நகரில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பில் நகர சபையினூடாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

​இதன்போது, முகக்கவசம் அணியாமலிருந்த சிற்றுண்டிச்சாலை ஊழியர்களிடம் குறித்த நகர சபை உத்தியோகத்தர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன்போதே, உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து நகரசபை தலைவரிடமும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்