ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் – பொலிஸார் இடையில் மோதல்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் – பொலிஸார் இடையில் மோதல்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2021 | 7:57 pm

Colombo (News 1st) வேலையில்லா பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு இவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வௌியேற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்த போது அமைதியின்மை ஏற்பட்டது.

வருடாந்தம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் போது தேசிய திட்டமொன்றை வகுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகைளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்றனர்.

இதனையடுத்து, வேலையற்ற இரண்டு பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு அதிகாரிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்