குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2021 | 7:25 pm

Colombo (News 1st) குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு இன்று (22) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று 520 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை, குருநாகல் – கனேவத்த பகுதியிலுள்ள தித்தவெல்கல கிராம சேவையாளர் பிரிவு நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்