இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 3,14,000 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 3,14,000 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 3,14,000 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2021 | 8:34 pm

Colombo (News 1st) இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 3,14,000-இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இது உலகளாவிய ரீதியில் ஒரு நாளில் பதிவான அதிகூடிய நோயாளர் எண்ணிக்கையாகும்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 2100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 16 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழக அரசு ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதை மறுத்துள்ளது.

இந்நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக டெல்லி தனியார் மருத்துமனையொன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளது.

பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து மக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்