பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும்: சுகாதார அமைச்சர்

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும்: சுகாதார அமைச்சர்

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும்: சுகாதார அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2021 | 3:27 pm

Colombo (News 1st) தேவைக்கு அமைய பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கட்டம் கட்டமாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

தேவையான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களின் அடிப்படையில் பெருந்தோட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

494 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் பொறுப்பேற்கப்படவுள்ளதாகவும் அவற்றுக்கு தேவையான மனித வளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்