துறைமுக நகர சட்டமூலம் அடிமை மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது: எல்லே குணவங்ச தேரர் தெரிவிப்பு

துறைமுக நகர சட்டமூலம் அடிமை மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது: எல்லே குணவங்ச தேரர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Apr, 2021 | 7:12 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பிற்போக்கான அடிமை மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டது என தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெறுமதியான நிலத்தை சூறையாடும் ஊழலுக்கு வழிகோலும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக தேரர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு பதிலாக இலங்கைக்கு நன்மை கிடைக்கும் புதிய சட்டமூலமொன்றை சமர்ப்பிக்குமாறு எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்