ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை; பொலிஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டு நிரூபணம்

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை; பொலிஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டு நிரூபணம்

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை; பொலிஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டு நிரூபணம்

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2021 | 8:48 am

Colombo (News 1st) அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் ப்ளொய்டின் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய முன்னாள் Minneapolis பொலிஸ் அதிகாரி மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.

கடந்த வருடம் மே மாதத்தில், ஜோர்ஜ் ப்ளொயிட் கைது செய்யப்பட்டதன் பின்னர் 9 நிமிடங்கள் வரை பொலிஸ் அதிகாரியினால் கழுத்து நெரிக்கப்பட்ட காட்சி நபர் ஒருவரால் ஔிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த காணொளி வௌியிடப்பட்டதை தொடர்ந்து ஜோர்ஜ் ப்ளொய்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

45 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி Derek Chauvin க்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன.

அவருக்கு இன்னும் 8 வாரங்களில் சிறைத்தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் அவர் அதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

12 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த மூன்று வாரங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்