கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Apr, 2021 | 10:19 am

Colombo (News 1st) இன்று (21) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 367 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 94 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 54 பேரும் கண்டி மாவட்டத்தில் 22 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் நால்வரும் யாழ். மாவட்டத்தில் 08 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 21 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் மூவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் மூவரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் பொலன்னறுவை ஆகிய 5 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இதுவரை 97,472 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள அதேநேரம், 93,547 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (21) 05​ கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்