உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை

உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2021 | 1:07 pm

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை கரோலைன் ஜூரி மீள கையளித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு, அதே வருடத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அயர்லாந்தை சேர்ந்த கேட் ஷினெய்டருக்கு (Kate Schneider) வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு திருமதி அழகிப் பட்டத்தை மீள கையளிப்பதற்கு கரோலைன் ஜூரி சுயமாக மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோலைன் ஜூரி தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும் உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்