கிளிநொச்சியில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றல்

கிளிநொச்சியில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2021 | 12:25 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – பள்ளிக்குடா கடற்கரையில் 150 கிலோ கிராமுக்கும் அதிக கேரள கஞ்சா இன்று (20) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

பள்ளிக்குடா கடற்கரை காட்டுப் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்