அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தீனியாவல பாலித்த தேரர் மனு தாக்கல் 

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தீனியாவல பாலித்த தேரர் மனு தாக்கல் 

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2021 | 1:14 pm

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தீனியாவல பாலித்த தேரரினால் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

23 பில்லியன் ரூபாவுக்கும் அதிக, மக்கள் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடை நாலந்தாராமய விகாரையின் விகாராதிபதி தீனியாவல பாலித்த தேரர் உயர் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் அடிப்படை உரிமை மனுவினை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் கலாநிதி P.B.ஜயசுந்தரவும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களின் பணம் தவறாக கையாளப்பட்டுள்ளதாக தீனியாவல பாலித்த தேரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்