மே தின கூட்டத்தை ஒன்றிணைந்து நடத்த தீர்மானம் 

மே தின கூட்டத்தை ஒன்றிணைந்து நடத்த தீர்மானம் 

by Staff Writer 19-04-2021 | 10:05 PM
Colombo (News 1st) இம் முறை மே தின கூட்டத்தை ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற வகையில் ஒன்றிணைந்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (19) பிற்பகல் நடைபெற்றது. சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் சிலர் ஊடகத்திற்கு கருத்து வௌியிட்டனர். இம்முறை மே தின கூட்டத்தை ஒன்றிணைந்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான அழைப்பை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நகரசபைத் திடலில் மேதின கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை, பொதுஜன கூட்டமைப்பு ஒன்றிணைந்த மே தின கூட்டத்தை நடத்தினாலும் சமசமாஜ மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக மே தின கூட்டத்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதன்போது குறிப்பிட்டார்.