ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை 

ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2021 | 2:30 pm

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே கர்தினால் ஆண்டகை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் (18) தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பிழையான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்