சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் - நீதி அமைச்சர் 

by Staff Writer 18-04-2021 | 8:05 PM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.