விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க தீர்மானம்

விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க தீர்மானம்

விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2021 | 2:33 pm

Colombo (News 1st) விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய பிரதான செய்கைகள் குறித்து நிறுவப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பம் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து கைத்தொழில் அமைச்சின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்