நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

திருகோணமலையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 18-04-2021 | 1:58 PM
Colombo (News 1st) திருகோணமலை - முள்ளிப்பொத்தானை - பரவிப்பாஞ்சான் குளத்தில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். குளத்தில் நீராடச் சென்ற 14 வயதான இரண்டு சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, கம்பளை - மஹர பகுதியில் மகாவலி ஆற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாவலி ஆற்றுக்கு அருகிலுள்ள தமது தென்னந்தோட்டத்தில் தேங்காய் எடுக்கச் சென்ற நபர், கால் வழுக்கி ஆற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த நபர், அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளையைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏனைய செய்திகள்