தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

by Staff Writer 17-04-2021 | 7:56 PM
Colombo (News 1st) சித்திரைப் புத்தாண்டின் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வின் புண்ணியகாலம் இன்று காலை 7.16 க்கு ஆரம்பமானது. நீல வர்ணத்துடனான ஆடையணிந்து தென் திசை நோக்கி எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது சம்பிரதாயமாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வை உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறைவேற்றினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்றார். தம்பான ஆதிவாசி மக்கள் கொடபகினியில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பௌத்த பாரம்பரிய நிகழ்வை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையில் மேற்கொண்டனர். சம்பிரதாயப்பூர்வமான பாரம்பரிய நிகழ்வுகளின் பின்னர் ஆதிவாசிகளின் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னவல யானைகள் காப்பகத்திலும் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.