ஹல்துமுல்லயில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு

ஹல்துமுல்லயில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு

ஹல்துமுல்லயில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2021 | 3:06 pm

Colombo (News 1st) ஹல்துமுல்ல – களுபஹன பகுதியில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த தந்தை, மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மஹரகம பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விடுமுறையில் பதுளைக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன் மூவர், வெலிஓயாவில் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர்.

பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய மூவரில் ஒருவரை காப்பாற்றியுள்ளனர்.

இருப்பினும், 45 வயதான தந்தையும் 14 வயதான அவரது மகனும் காணாமல் போயிருந்தனர்.

பிரதேச மக்களுடன் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் காணாமற்போன இரண்டு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்