மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில் அனுமதி

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில் அனுமதி

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

16 Apr, 2021 | 3:16 pm

Colombo (News 1st) நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விசேட வைத்திய நிபுணர்கள் அவரை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அவரின் இதயம் மற்றும் நுரையீரல் செயற்பாட்டை சீராகப் பேணுவற்காகவும் உடல் நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும் ECMO கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இன்று காலை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரத்த நாள அடைப்பைக் கண்டறிவதற்காக Angiogram சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கையை வைத்தியசாலை விரைவில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்