வறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்தில் இடையூறு

வறட்சியுடனான வானிலையால் நீர் விநியோகத்திற்கு இடையூறு

by Staff Writer 15-04-2021 | 1:48 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான வானிலையினால், நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் சாத்தியமுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. வறட்சியுடனான வானிலை காரணமாக நீரேந்து பகுதிகளில் நீர் வற்றியுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் நாளொன்றில் 24 மணித்தியாலங்களும் ஒரே அளவில் நீரை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக, மேட்டுநிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்துடனேயே நீர் விநியோகிக்கப்படுகின்றது. நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என்பதால், அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும் நீரின்றி அல்லலுறும் மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நீர் விநியோகம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின் 1939 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக் கொண்டுள்ளது.