Colombo (News 1st) நேற்றைய தினம் (14) 02 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
கரவெட்டியைச் சேர்ந்த 83 வயதான ஆணொருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
ஹிரிவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று (14) மரணத்துள்ளார்.

இதனிடையே, நாட்டில் இதுவரை 95,737 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
