சைபர் தாக்குதலுக்கு பதிலாக ரஷ்யா மீது தடை விதிக்கும் அமெரிக்கா 

சைபர் தாக்குதலுக்கு பதிலாக ரஷ்யா மீது தடை விதிக்கும் அமெரிக்கா 

சைபர் தாக்குதலுக்கு பதிலாக ரஷ்யா மீது தடை விதிக்கும் அமெரிக்கா 

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2021 | 3:00 pm

Colombo (News 1st) ரஷ்யாவுக்கு எதிராக பரந்தளவிலான தடைகளை அமுல்படுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட சைபர் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தடைகள் அமைந்துள்ளன.

அத்துடன், 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தத் தடைகள் இன்றைய தினம் (15) அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தடைகள் 30 ரஷ்ய நிறுவனங்களை இலக்கு வைத்துள்ளதுடன், 10 தனிப்பட்ட நபர்களை அமெரிக்காவிலிருந்து வௌியேற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் இராஜதந்திரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் மாதத்திலிருந்து, அமெரிக்க நிதிநிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து பிணைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தடைவிதிக்கும் நிறைவேற்று உத்தரவொன்றை வௌியிடுவதற்கும் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்