சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவரும் சம்பவங்கள் அதிகரிப்பு

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவரும் சம்பவங்கள் அதிகரிப்பு

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவரும் சம்பவங்கள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2021 | 2:45 pm

Colombo (News 1st) போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைக்கு எடுத்து வரப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பண்டிகைக் காலத்தில் பெருமளவான தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு வரும் வௌிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

மெகசின், களுத்துறை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு, சிறைச்சாலை வைத்தியசாலை உள்ளிட்ட பகுதிகளை அண்மித்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், கைதிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்