களுபஹன பகுதியில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயினர் 

களுபஹன பகுதியில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயினர் 

களுபஹன பகுதியில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயினர் 

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2021 | 3:42 pm

Colombo (News 1st) ஹல்துமுல்லை – களுபஹன பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகமவ பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) பிற்பகல் வேலி- ஓயா பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போனவர்களை தேடுவதற்காக, இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் E.M.L. உதயகுமார குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்