11 கடும்போக்குவாத அமைப்புகளுக்கு தடை

11 கடும்போக்குவாத அமைப்புகளுக்கு தடை

by Staff Writer 14-04-2021 | 6:29 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், 11 கடும்போக்குவாத அமைப்புகளை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நாட்டின் சமாதானத்தை தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்கென, நன்னோக்குடனும் தேசிய பாதுகாப்பு பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த அமைப்புகள் தடை செய்யப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தௌஹீத் ஜமாத் சிலோன் தௌஹீத் ஜமாத் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அகில இலங்கை தௌஹீத் ஜமாத் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா தாறுல் அதர் ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு அல்கய்தா அமைப்பு சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகிய அமைப்புகள் நேற்று (13) நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன. சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.