இந்திய கடற்படையின் INS ரன்விஜய் கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் INS ரன்விஜய் கப்பல் நாட்டை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2021 | 8:20 pm

Colombo (News 1st) இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS ரன்விஜய் (INS Ranvijay) கப்பல் இன்று (14) கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்தது.

மூன்று நாட்கள் சிநேகபூர்வ பயணமாக இது அமைந்துள்ளது.

முற்போக்கு மற்றும் நெருங்கிய அயல் நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்தக் கப்பல் வந்துள்ளது.

இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தமை, தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைக் கொண்டுவருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

INS ரன்விஜய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.

அத்துடன், நவீன உள்நாட்டு Bramhos supersonic missile ஐயும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்