பன்னலகம கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

பன்னலகம கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 12-04-2021 | 3:27 PM
Colombo (News 1st) அம்பாறை - பன்னலகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பன்னலகம பகுதியைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.